மீமிசலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்




ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அபிநயா தலைமை தாங்கினார். ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தனர். இதில் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று தங்களது தனி திறனை வெளிக்காட்டும் விதமாக சிலம்பாட்டம், கராத்தே போன்ற பல்வேறு வித்தைகளை செய்து காண்பித்தனர். இதில் ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் சுரேஷ், தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments