புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வீசும் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதீத வெப்பத்தின் காரணமாக கண்களை முறையாக பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் நேரடியாக சூரியஒளி கண்களில் படும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்கும் முறை குறித்து கண் டாக்டர்கள் கூறியதாவது:-
கண்கள் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் உடல் மற்றும் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்க முடியும்.
கண்களில் எரிச்சல்...
ஆல்கஹால் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். கணினி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோடைகால பழங்களான தர்பூசணி, வெள்ளரி, நுங்கு போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதிக வெப்பம் காரணமாக கண்களில் எரிச்சல் மற்றும் வறட்சி தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது சுய வைத்தியம் செய்யாமல் கண் டாக்டரை அணுக வேண்டும். கண்கள் பாதுகாப்பாக இருக்க குளிர் கண்ணாடி அணியலாம்.
அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்கள் மற்றும் முகத்தை கழுவ வேண்டும். கோடை காலங்களில் காற்று மாசுப்பாட்டின் காரணமாக கண் கட்டி வரலாம். அப்போது நாமகட்டி, ஐஸ், வெந்நீர் ஒத்தடம் வைப்பது போன்றவை செய்யக்கூடாது. முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.