அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில்குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் வீரமுனி ஆண்டவர் கோவில் சந்தன காப்பு விழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, அறந்தாங்கி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 137 மாட்டு வண்டிகள் மற்றும் 109 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், நடுமாடுக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் மாடுக்கு 5 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுக்கு 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் பெரிய குதிரை போய் வர 8 மைல் தூரமும், நடுகுதிரைக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் குதிரைக்கு 5 மைல் தூரமும், சின்ன குதிரைக்கு 4 மைல் தூரமும் என பந்தயம் நிர்ணயிக்கப்பட்டது.

பரிசு

இதையடுத்து மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.

இதனைெதாடர்ந்து குதிரை, மாட்டு வண்டி பந்தயங்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கு கொடி பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் திரளான ரசிகர்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments