பெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை




அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிாிவுகளில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி முதல்வர் துரை தலைமையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் முதல் ஷிப்ட்டில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், பி.காம், பி.பி.ஏ. பட்டப்படிப்புகளும், 2-வது ஷிப்ட்டில் பி.ஏ. தமிழ், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெறும். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை உடனடியாக அணுகி, விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இனச்சான்று, வருமானச்சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 29-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments