புதுக்கோட்டை: பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் 2026-27 மாணவர் சேர்க்கை தொடக்கம்!



புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், தமிழக அரசால் விடுதியுடன் கூடிய பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

பள்ளியின் சிறப்பம்சங்கள் மற்றும் இலவச வசதிகள்: மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இப்பள்ளியில் பல்வேறு வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன:

  1. சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி.

  2. தரமான உணவுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி.

  3. இலவச சீருடைகள் மற்றும் சிறப்பு கல்வி உதவித்தொகை.

  4. பிரெய்லி (Braille) மற்றும் அபாகஸ் (Abacus) போன்ற சிறப்பு கற்றல் உபகரணங்கள் மூலம் பயிற்சி.

  5. இசைக்கருவிகள் வாசிப்பதற்கான சிறப்புப் பயிற்சி.

  6. மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க ஆண்டுக்கு ஒருமுறை இலவசக் கல்விச் சுற்றுலா.

முன்னாள் மாணவர்களின் சாதனைகள்: இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும், சிறந்த முறையில் கல்வி கற்று இன்று அரசுத் துறைகளில் கல்லூரி விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், பல்வேறு அரசு அலுவலர்களாகவும் பணிபுரிந்து வருவது இப்பள்ளிக்கு பெருமை சேர்க்கிறது.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துத் தர வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் திருமதி. அருணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்கள் மற்றும் சேர்க்கைக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

திரு. வடிவேல், தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதிய பஸ் நிலையம், புதுக்கோட்டை - 622 001.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments