ஆவுடையார்கோவில் தாலுகா, கரூர் பகுதியில் இருந்து மீமிசல் செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாகக் காணப்படுகிறது. இந்த சாலையில் ஒரு வாகனம் வந்தால், எதிரே வரும் மற்றொரு வாகனம் சற்று நின்றுதான் கடந்து செல்ல வேண்டும். அந்த அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி நிலவும் குறுகிய சாலையாக இது உள்ளது.
ஆக்கிரமிக்கும் சீமைக்கருவேல மரங்கள் இந்நிலையில், கரூரில் இருந்து மீமிசல் வரையிலான சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் முழுவதுமாக வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகனங்கள் சீராகச் செல்ல முடியாத அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா? இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை மரங்களை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எனவே, பெரிய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடும் முன்பு, சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலுவான கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.