அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 6 முதல் கலந்தாய்வு: முதல்வர் தகவல்!



அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இள அறிவியல் (BA, BSc, BCom, BBA) பாடப்பிரிவுகளுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
​புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை கோரி, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு மற்றும் பொதுக் கலந்தாய்வு பின்வருமாறு நடைபெற உள்ளது,

​ஜூன் 6 (சனிக்கிழமை): மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுத் துறை மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகிய பிரிவினருக்கான சிறப்புக் கலந்தாய்வு.
ஜூன் 10 (புதன்கிழமை): பி.எஸ்சி. கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் கணிதவியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான பொதுக் கலந்தாய்வு.
ஜூன் 11 (வியாழக்கிழமை): பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பி.காம். வணிகவியல், பி.பி.ஏ. நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பொதுக் கலந்தாய்வு.
முக்கிய விவரங்கள்
இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் காலை 10:00 மணிக்குத் தொடங்கும். கல்லூரிக்கல்வித்துறை தரவரிசைப் பட்டியலின்படி (Rank List), தகுதிபெற்ற மாணவர்களின் அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு வருகிறது.
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
குறுஞ்செய்தி வரப்பெற்ற மாணவ, மாணவியர் தங்களின் இணையதள விண்ணப்பப் படிவத்துடன், பின்வரும் சான்றிதழ்களின் அசல் (Original) மற்றும் 5 நகல்களை (Xerox) தவறாமல் கொண்டு வர வேண்டும்:
  1. ​10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள்
  2. ​பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC)
  3. ​சாதிச் சான்றிதழ் (Community Certificate)
  4. ​ஆதார் அட்டை
  5. ​வருமானச் சான்றிதழ்
  6. ​வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்
  7. ​சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (5)
​குறிப்பிட்ட தேதிகளில் தகுதிவாய்ந்த மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments