அறந்தாங்கி அருகே வெள்ளாட்டுமங்களம் கிராமத்தில் பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பம் ஒன்று திடீரென உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வெள்ளாட்டுமங்களம் கிராமத்தில், ஆபத்தான நிலையில் பழுதடைந்த மின் கம்பம் ஒன்று இருந்து வந்துள்ளது. இது குறித்து நாகுடி மின் வாரிய நிர்வாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், புகார்களை அளித்தும் எந்தவித நடவடிகையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பம் (HD Line) திடீரென வேரோடு முறிந்து கீழே விழுந்தது. மின் கம்பம் விழுந்த சமயத்தில் அருகில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதமும் இன்றி பொதுமக்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், "பலமுறை முறையிட்டும் மின் வாரியம் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம். தற்போது மழை இல்லாத இந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கும் அனைத்து உயர் அழுத்த மின் கம்பங்களையும் (HD Line) மின் வாரிய நிர்வாகம் உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.