அடைமழை காலம் தொடங்கும் முன் கோபாலப்பட்டிணம் ரைஸ்மில் பகுதியில் கோரை மற்றும் கருவேல மரங்களால் சூழ்ந்து காணப்படும் வரத்து வாய்க்காலை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!



கோபாலப்பட்டிணம் பகுதியில் மழை தொடங்கியுள்ளதால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்துவாரிகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றன. இக்குளத்திற்கு மழை காலங்களில் மழைநீர் கரவந்தன் கன்மாய் மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல் வெளிகள் முழுவதாமாக நிறைந்து பின்னர் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரத்து வாய்க்கால் வழியாக காட்டுகுளம் மற்றும் கல்குளத்தில் கலக்கிறது. மேலும் ரைஸ்மில் அருகில் இந்த வாய்க்கால் இரண்டாக பிரிகிறது. அதில் ஒன்று காட்டுகுளம் மற்றும் கல்லுக்குளத்திற்கு செல்கிறது. இன்னொன்று காட்டுகுளம் மேற்கு பகுதி, கோட்டையன் தோப்பு, அரண்மனை தோப்பு வழியாக சென்று உபரி மழை தண்ணீர் கடலில் கலக்கிறது.

இந்நிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடிக்கடி கோபாலப்பட்டிணத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோபாலப்பட்டிணம் ரைஸ்மில் அருகில் உள்ள வரத்து வாய்க்காலில் கோரைகள் மற்றும் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து தண்ணீர் செல்லமுடியாமல் ஆக்கிரமித்துள்ளது.


அடைமழை காலம் தொடங்கும் முன்னர் காட்டுகுளம் மற்றும் உபரி நீர் செல்லக்கூடிய ரைஸ்மில் பகுதி வாய்க்காலை சூழ்ந்துள்ள கோரைகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி வரத்து வாய்க்காலை உடனடியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments