மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து பகுதியான கோபாலப்பட்டிணம் செய்யானம் பிரிவு சாலையில் பேரிகாடு அமைப்பு.!
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து பகுதியான கோபாலப்பட்டிணம் செய்யானம் பிரிவு சாலையில் பேரிகாடு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை முக்கிய சாலையாக உள்ளது. தினமும் பல்வேறு வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகிறது.

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில்  அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக கோபாலப்பட்டிணம் செய்யானம் பிரிவு சாலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பேரிகாடு வைக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகாடு அமைத்த காவல் துறைக்கு பொதுமக்கள் மற்றும் GPM மீடியா சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் பேரிகாடு அமைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை என GPM மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments